தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இ-டிக்கெட் முறை மற்றும் மொபைல் ஸ்கேனிங் வழியாக பயணச்சீட்டு பெறும் முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து துறை அறிவிப்பு :
தமிழகத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் பயணங்களுக்கு தேர்வு செய்யும் சேவை போக்குவரத்து சேவை என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது, நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தால், மொபைல் ஸ்கேனிங் வழியாக ஜிபே மற்றும் போன் பே உள்ளிட்ட மொபைல் ஆப் மூலம் டிக்கெட் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோக, பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும், இதற்கான டெண்டர் பணிகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்