தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் – அடுக்கடுக்காய் எழுந்த குற்றச்சாட்டு! அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் - அடுக்கடுக்காய் எழுந்த குற்றச்சாட்டு! அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் - அடுக்கடுக்காய் எழுந்த குற்றச்சாட்டு! அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் மகளிருக்கான, இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

முக்கிய விளக்கம் :

தமிழகத்தில், பதவி ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில், இலவச பயணத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை அடுத்து, ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சியில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது, இந்த இலவச பேருந்துகள் பல கிராமப்புறங்களில் உள்ள நிறுத்தங்களில் நிற்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் - தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் பேட்டி!!

இது குறித்து விளக்கமளித்த போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து பணியாளர்களுக்கு இது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுபோக கிராமப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் தானியங்கி கருவி பொருத்தப்படும் என்றும், எல்லாப் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here