தமிழக பட்ஜெட் 2024-25.., மகளிர் உரிமை தொகையில் வரவிருக்கும் மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக பட்ஜெட் 2024-25.., மகளிர் உரிமை தொகையில் வரவிருக்கும் மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் பழைய ஓய்வூதிய திட்டம், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்குவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே சம்பளம், மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்கள் வைத்து வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் மேல்முறையீடு செய்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பமும் பரிசீலனை செய்து அவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம். ஒருவேளை இதற்கு அரசு அனுமதி அளித்தால் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here