தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: ஆசிரியர்களுக்கு பணி நியமனம், சம்பள உயர்வு, பழைய ஓய்வூதியம்.., வெளியாக இருக்கும் அறிவிப்புகள்??

0

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 பிப்ரவரி 12ம் தேதி தொடங்க இருக்கிறது. குறிப்பாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலில், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தல், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், அரசு பணியில் அமர TET தேர்ச்சியை போதும் என்பதை உறுதி செய்து நியமன (போட்டித்) தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்டவைகள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here