Friday, March 29, 2024

தமிழகத்தில் அதிகரித்த சிசேரியன் குழந்தைப்பேறு, குறைந்த தாய்ப்பால் ஊட்டம் – ஷாக் ரிப்போர்ட்!!

Must Read

தமிழகத்தில் தாய்ப்பால் கொடுப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் சிசேரியன் முறையில் குழந்தைப்பேறு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்:

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பெண்களும் சுகப்பிரசவத்திற்கு பயந்து சிசேரியன் மூலமாக தான் குழந்தை பெற்று கொள்கின்றனர். அப்படி பெற்றுக்கொண்டாலும் இன்றைய காலத்து பெண்களுக்கு எப்படி தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பது குறித்து தெரிவதில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள குழந்தைப்பேறு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கருத்தரங்கில் ஆய்வு குறித்த முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது, பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் 54.7 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் புகட்டப்படுகிறது. அதேபோல் 6 மாதங்களுக்கு பிறகு 48.3 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் வழங்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களை விட மிக குறைந்த அளவாக பார்க்கப்படுகிறது.

பீட்டர் பால் நம்பர இன்னும் வச்சிருக்கியா?? வனிதாவிடம் சரமாரியான கேள்விகளை கேட்ட உமாரியாஸ்!!

அதே போல் 6 முதல் 8 மாதங்களுக்குள்ளான குழந்தைகளுக்கு திட மற்றும் திரவ உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள அளவினை விட தமிழகத்தில் அதிக அளவில் சிசேரியன் முறையில் குழந்தைப்பேறு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட 34 சதவீதம் தமிழகத்தில் அதிகமாக சிசேரியன் நடைபெறுகின்றது. இவ்வாறாக அந்த ஆய்வு ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -