சினிமாவில் குதித்த பாஜக தலைவர் அண்ணாமலை – இணையத்தில் கசிந்த சம்பள விபரம்! வைரலாகும் போஸ்டர்ஸ்!!

0
சினிமாவில் குதித்த பாஜக தலைவர் அண்ணாமலை - இணையத்தில் கசிந்த சம்பள விபரம்! வைரலாகும் போஸ்டர்ஸ்!!
தமிழக பாஜக தலைவர், அண்ணாமலை அரபி என்ற படத்தில், சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த விஸ்வாஸ் என்ற  வீரரின் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

நடிகரான அண்ணாமலை:

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அண்ணாமலை என்பவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தேசிய கட்சியான பாஜக மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழக, பாஜக கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அரபி என்று பெயரிடப்பட்டுள்ள  பயோபிக் படமொன்றில் இவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் இரண்டு கைகளும் இல்லாமல் நீச்சல் பயிற்சியில் சாதனை படைத்த, விஸ்வாஸ் என்ற வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.
இந்த படத்தில், இந்த வீரரின் பயிற்சியாளராக நடிக்க அண்ணாமலை கமிட்டாகியுள்ளார். முதலில், இந்த படத்தில் நடிக்க மறுத்த இவர், கதை பிடித்துப்போனதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுபோக இந்த படத்திற்காக இவர் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here