தமிழகம் முழுவதும் 17,268 பேருந்துகள் இன்று இயக்கம் – இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் ஆறுதல்!!

0
தமிழகம் முழுவதும் 17,268 பேருந்துகள் இன்று இயக்கம் - இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் ஆறுதல்!!
தமிழகம் முழுவதும் 17,268 பேருந்துகள் இன்று இயக்கம் - இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் ஆறுதல்!!

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் இன்றும் தொடர்ந்தாலும், வழக்கம் போல் 89.52% பேருந்துகள் இயங்குவதால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இயல்பு நிலை திருப்பம்:

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழில் சங்க ஊழியர்கள் 2 நாட்கள் போராட்டத்தை, நேற்றும் இன்றும் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த இந்த பொது வேலை நிறுத்ததால் தமிழகத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, நேற்று தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் போராட்டம் தொடர்ந்தாலும், மக்களின் நலன் கருதி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று மொத்தமுள்ள 19,290 பேருந்துகளில் 17,268 பேருந்துகள்  வழக்கம் போல் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும்,  3233 பேருந்துகளில் 3169 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் பெறகிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here