தமிழக அரசானது, பொது மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சுத்தமான குடிநீரை கிராம புறங்களில் உள்ள மக்கள் பெற வேண்டும் என்பதற்காக கண்மாய், குளங்களில் மராமத்து பணிகள் மேற்கொண்டு மழைக்காலத்தில் தண்ணீரை சேகரித்து வைக்கின்றன. இந்நிலையில், இந்த தண்ணீர் சேகரிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, விருதுநகர் மாவட்டம் விளக்குச்சேரியில் உள்ள கண்மாயில் மராமத்து பணி மேற்கொள்ள கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்து வந்துள்ள நிலையில், தற்போது மராமத்து பணியை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதாவது, ஜனவரி முதல் மே மாதம் வரை மராமத்து பணி மேற்கொண்டால் தான், ஜூன் முதல் டிசம்பர் வரை பெய்யும் பருவ மழைக்கான தண்ணீரை சேகரிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு தான் தற்போதைக்கு பொதுமக்கள் மராமத்து பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று உள்ளனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கண்மாயில் தண்ணீரை பாதுகாக்க வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.
ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இது குற்றம் இல்லை? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!