தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை – அரசாணை வெளியீடு!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை அதாவது காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வகுப்புகள் நடைபெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த இரு ஷிப்ட் முறை நிறுத்தப்பட்டு உள்ளது.

கல்லூரி நேர மாற்றம்:

தமிழகம் முழுவதும் 114 அரசுக்கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அதிகளவிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவற்றில் 65க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மிக அதிகளவிலான மாணவர்கள் பயில்வதால் காலை & மாலை என இரு ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் காலை வேளையில் நிரந்தர விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்கின்றனர். மாலை நேர வகுப்புகளில் 1,161 கவுரவ தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

காலை வகுப்புகள் 8.45 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 வரையும், மாலை வகுப்புகள் 1.30 மணிக்குத் தொடங்கி 6 மணி வரையும் நடைபெறுகிறது. இதிலும் மாலை நேர வகுப்புகளில் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். மேலும் வகுப்புகளும் இவ்வாறு இரு பிரிவுகளாக நடைபெறுவதால் அதில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 50 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு ஷிப்ட் வகுப்புகள் நிறுத்தப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

M.Phil படிப்புகள் நிறுத்தம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள் அறிவிப்பு!!

வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதால் மாணவர்கள் அதிகளவில் கற்க முடியும் மேலும் கல்லூரிகளின் தரத்தையும் உயர்த்த முடியும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here