பல்கலை வழங்கிய அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

0

இன்று அரியர் தேர்வு ரத்து குறித்த விசாரணையில் பல்கலைகழகங்கள் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையினை விதித்துள்ளது. அதே போல் விசாரணை யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதற்கு நீதிமன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம்:

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அரியர் உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் உட்பட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த முறை நடந்த போது மாணவர்கள் மற்றும் சிலர் அமைதியினை கடைபிடிக்காமல் இருந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை இன்று நடந்தது. இன்று இந்த விசாரணை நடந்த போது யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அரியர் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை – யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி!!

அதே போல் வழக்கு குறித்து பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடையினை வழங்கியுள்ளது. அரியர் தேர்வு குறித்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது எதற்காக முடிவுகளை வெளியிட வேண்டும்? என்று பல்கலைக்கழகங்களுக்கு கேள்வியையும் எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து வழக்கிற்கான முறையான தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக, யூடியூப் தளத்தில் வெளியிட்டவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பலக்லைக்கழகங்கள் விரும்பினால் தேர்வுகளை நடத்தலாம் என்றும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வாயிலாகவோ நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல் இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நேரடியாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here