தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி? உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய பரிந்துரை!!

0
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி? உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அரசுக்கு முக்கிய பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரசுக்கு உத்தரவு :

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என கல்வி நிறுவனங்கள் பெரும் அளவில் இயங்கி வருகிறது. அரசு நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில், மாணவர்களிடம் பெரிய அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் கல்வி கட்டணங்கள்  வசூலிக்கப்படுகின்றன. அந்த வகையில் மதுரை உசிலம்பட்டியில் அமைந்துள்ள, மூக்கையா தேவர் கல்லூரியில்  அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக  கட்டணம் வசூலிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

madurai highcourt latest

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்க மீண்டும் என தனது கருத்தை பதிவு செய்தார். அதுபோக, அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த கருத்து, ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here