
தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த வகுப்புக்கு செல்ல, நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நுழைவுத் தேர்வு :
தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சமீப காலமாக பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள், இதிலிருந்து 10ம் வகுப்புக்கு செல்ல கடந்த 4ம் தேதி நுழைவு தேர்வு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து பேசிய தமிழக ஆசிரியர் நல கூட்டமைப்பு தலைவர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது போன்ற நடைமுறை இல்லாத நிலையில், அரசு மாதிரி பள்ளிகளில் மட்டும் இதுபோன்று செய்வது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.
இது போக, RTE எனப்படும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச கல்வியில் சேர்க்கப்படும் 25% மாணவர்களுக்கு, இது போன்ற நுழைவுத் தேர்வு இல்லாமல், குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார். எனவே இது போன்ற சமூகத்தின் நீதியை குலைக்கும் செயல்களை அரசு உடனே நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.