தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை… இத்தனை சதவீதமா?? – தமிழக அரசின் தகவல்!!!

0

தமிழகம் முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 30% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தமிழ்நாடு சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றை ஒழிப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்பது உலகளாவிய விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.அதே நேரத்தில் 130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவதில் தடுப்பூசி தட்டுப்பாடு இடையூறாக உள்ளது.

 

இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் கோவிட் -19 நெறிமுறையைப் பின்பற்றி கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போட சிறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.சிறை ஊழியர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து கைதிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் பலனால் தமிழகத்தில் உள்ள சிறைக்கைதிகளில் 30% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயங்குனர் சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here