தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

0
தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் உயர்கல்வியை தொடராத மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பணிகளில் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

உயர்கல்வி:

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஏராளமான மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியை தொடர வில்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து மாணவர்கள் எதனால் உயர்கல்வியை தொடர வில்லை என்பதற்கான காரணத்தை அறிய பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதையடுத்து மாணவர்கள் வறுமை, குடும்ப சூழல், உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் உயர்கல்வி தொடரவில்லை என கண்டறியப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் மாணவர்கள் உயர்கல்வியை தொடர வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் வாயிலாக மாணவர்களும் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த வகையில் மேலும் 777 உயர்கல்வியை தொடராத மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே இந்த 777 மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழக வீராங்கனை…, கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு…, எதிர்ப்புகள் எதிரொலிகள்!!

மேலும் வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, 777 மாணவர்கள் உயர்க்கல்வியில் சேருவதற்கான உதவி மையம் (Help Center) அனைத்து கலெக்டர் ஆபிசில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வரும் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here