12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு., நாளை முதல் ஹால் டிக்கெட் ரிலீஸ்! தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!

0
12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு., நாளை முதல் ஹால் டிக்கெட் ரிலீஸ்! தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!
12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு., நாளை முதல் ஹால் டிக்கெட் ரிலீஸ்! தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நாளை முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும், தேதி குறித்த அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, இந்தத் பொது தேர்வுகள் நடக்காமல், கடந்தாண்டு தான் வழக்கம் போல் தேர்வு நடத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இந்த ஆண்டு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

“அண்ணாமலை கீழ் எந்த பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது” .., காயத்ரி ரகுராம் குற்றசாட்டு!!

அந்த வகையில், 12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பிற்பகல் 2 மணியிலிருந்து, அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரிய அளவில் தேர்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here