தமிழக மக்களே உஷார்., 11 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழக மக்களே உஷார்., 11 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதையொட்டி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இன்று சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் இன்று குறிப்பிட்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!!

அந்தவகையில் கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here