தமிழக 10 மற்றும் +2 மாணவர்கள் கவனத்திற்கு… இதற்கு இன்றே கடைசி நாள்…, மிஸ் பண்ணிராதீங்க!!

0
தமிழக 10 மற்றும் +2 மாணவர்கள் கவனத்திற்கு... இதற்கு இன்றே கடைசி நாள்..., மிஸ் பண்ணிராதீங்க!!
தமிழக 10 மற்றும் +2 மாணவர்கள் கவனத்திற்கு... இதற்கு இன்றே கடைசி நாள்..., மிஸ் பண்ணிராதீங்க!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தற்போது அடுத்தக்கட்ட படிப்புகளை தேர்வு செய்வதில் மும்மரமாக இறங்கி உள்ளனர். இவர்களில், 10 வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 படிப்பிற்கும், பிளஸ் 2 முடித்தவர்கள் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட மேற்படிப்பில் சேர பலர் எண்ணுவர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தொழிற்கல்வி மீது ஆர்வமுள்ள 10 அல்லது பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) இணைந்து கல்வி கற்க முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இத்தகைய ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, கடந்த மாதம் 24ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை www.skilltraining.tn.gov.in இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் நீக்க தேவையில்லை .., சென்னை ஐகோர்ட் உத்தரவு!!

இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 7) கடைசி நாள் என்பதால், தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசானது மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், பாடப் புத்தகம், சைக்கிள், சீருடை, சீருடைக்கான தையல் கூலி, மூடு காலனி, வரைபடக் கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவைகளை சலுகைகளாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here