நிஜ வாழ்க்கையில் தனது ரோஸை கண்டுபிடித்த ஜாக்…..,இந்திய பெண்ணுடன் டிகாப்ரியோ காதல்……,

0
நிஜ வாழ்க்கையில் தனது ரோஸை கண்டுபிடித்த ஜாக்.....,இந்திய பெண்ணுடன் டிகாப்ரியோ காதல்......,
நிஜ வாழ்க்கையில் தனது ரோஸை கண்டுபிடித்த ஜாக்.....,இந்திய பெண்ணுடன் டிகாப்ரியோ காதல்......,

உலகப் புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்து காதல் மன்னனாக அறிமுகமானவர் நடிகர் லியோர்னார்டோ டிகாப்ரியோ. இந்த படத்தில் ஜாக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு எக்கச்சக்க வரவேற்புகள் கிடைத்தது. இதற்கிடையில், தற்போது 48 வயதான நடிகர் லியோர்னார்டோ டிகாப்ரியோ அவ்வப்போது சில காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம்.

அதாவது, இந்தியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவருடன் நடிகர் லியோர்னார்டோ டிகாப்ரியோ காதலில் இருப்பதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் 28 வயதான மாடல் அழகி நீலம் கில். இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

டப்பிங் பணிகளை முடித்த ‘மாவீரன்’ படக்குழு….,அடுத்து தியேட்டர் ரிலீஸ் தான்….,

இந்த ஜோடி சமீபத்தில் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட புகைப்படங்கள், மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, இந்த காதல் விவகாரம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here