டைட்டானிக் பட ரோஸ்-க்கு நேர்ந்த சோகம் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதாபம்!!

0
டைட்டானிக் பட ரோஸ்-க்கு நேர்ந்த சோகம் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதாபம்!!
டைட்டானிக் பட ரோஸ்-க்கு நேர்ந்த சோகம் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதாபம்!!

உலக புகழ்பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் படப்பிடிப்பின் போது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேட் வின்ஸ்லெட்:

ஹாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து புகழ் பெற்றவர் தான் நடிகை கேட் வின்ஸ்லெட். இவர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் உலக சாதனையை படைத்தது. இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தை ஜேம்ஸ் கெமரூன் இயக்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட்டை, ஜாக் கதாபாத்திரத்தில் நடித்த டி கெப்ரியோ ஆகியோரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.இந்த நிலையில், நடிகை கேட் வின்ஸ்லெட் இதுவரை 42 திரைப்படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி சீரியலிலும் நடித்திருக்கிறார். மேலும் ஆஸ்கர் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.

விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

இந்நிலையில், தான் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும் போது இவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் நடிகை கேட் வின்ஸ்லெட்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் ரோஸ் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் குணமாகி விடு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here