கொரோனா 4ம் அலையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம் – சுகாதாரத்துறை எடுத்த அதிரடி முடிவு!!

0
நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா - தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!
நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா - தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 4ம் அலையை  எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150 மருத்துவ படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

கடந்த சில தினங்களாக குறைந்து வந்து வைரஸ் பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தற்போது கொரோனா, 4ம் அலை ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், கொரோனா 4ம் அலை வந்தால் அதை, சமாளிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், புதிதாக 150 படுக்கை வசதிகளுடன், மருத்துவ சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் யாருக்கும் வைரஸ் தொற்று பதிவாகவில்லை என்றாலும், முன்னேற்பாடாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here