இனிமேல் இதை செய்யவே கூடாது.., பொதுமக்களுக்கு கடைசி வார்னிங் கொடுத்த காவல்துறை? எதுக்கு தெரியுமா?

0
தற்போது நாட்டில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தற்போது சோசியல் மீடியாவில் மகளிர் கல்லூரி பேருந்தை மறைத்து சில இளைஞர்கள் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வந்தது.
இதை பார்த்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது, இந்த சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றது என்று தெரிய வந்தது. இது போன்ற பழைய வீடியோக்களை தற்போது புதிதாக வெளியீட்டு பரப்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் இதை கடைபிடிக்காமல் பழைய வீடியோவை ட்ரெண்ட் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூர் காவல்துறை கடைசி வார்னிங் என்று எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here