உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு மூலமாகவோ அல்லது இலவச தரிசன டிக்கெட் மூலமாகவோ தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் (டிசம்பர்) வர இருப்பதால், முன்பதிவு எப்போது? தொடங்கும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வைகுண்ட ஏகாதசி தரிசனம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அடுத்த மாதம் (டிசம்பர்) 23ஆம் தேதியில் இருந்து 2024 ஜனவரி 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.300 முன்பதிவு டிக்கெட் மூலம் 20,000 பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் மூலம் 30,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளார்கள். எனவே வருகிற நவ.10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் திறக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹான் கிடையாது., வரலாற்றை மாற்றனும்., உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!