ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு.,சொர்க்க வாசல் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு., இது தெரியாம போகாதீங்க?

0
ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு.,சொர்க்க வாசல் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு., இது தெரியாம கோவிலுக்கு போகாதீங்க?
ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு.,சொர்க்க வாசல் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு., இது தெரியாம போகாதீங்க?

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரபல கோயிலான திருப்பதியில் சொர்க்க வாசல் கதவு திறப்பு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

திருப்பதி:

பொதுவாக மார்கழி மாதத்தில் முக்கியமான விசேஷ நாளாக வைகுண்ட ஏகாதசி இருப்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்பேற்பட்ட மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு. அத்தகைய வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ரங்கம் மற்றும் திருப்பதி கோவில்களில் சிறப்பு தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு குறித்து தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி அதிகாலையில் 1 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் 2 மணி முதல் 5 மணி வரை புரோட்டா கால் விஐபிக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனைத் தொலைந்து 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் என அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் ஒரு நாளில் 80 ஆயிரம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு டோக்கன் வழங்கப்படும்.

சீக்ரெட்டாக நடந்த தளபதி 67 பட பூஜை.., லோகேஷ் என்ன இது? முதல் நாளே இப்படியா பண்ணுவீங்க?

அதில் 300 ரூபாய் டிக்கெட் கிட்டத்தட்ட 25,000 பக்தர்களுக்கு வழங்கப்படும். அதே போல் இலவச தரிசன டிக்கெட் 50,000 பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் டோக்கன்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாத பக்தர்கள் வழக்கம்போல் கோபுரத்தை சுற்றி பார்த்து மொட்டை அடித்து லட்டு வாங்கி செல்லலாம் என திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி. பத்து நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here