
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுதினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். தற்போது கார்த்திகை மாதம் துவங்கியதால் அனுதினமும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் புதிதாக திருமணம் முடித்துள்ள தம்பதிகளுக்கு, திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள் உள்ள புதுமண தம்பதிகள், திருப்பதியில் உள்ள CRO அலுவலகத்தில் ஆர்ஜித சேவா லக்கி டிப் கவுண்டருக்கு சென்று திருமண புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு 20 டிக்கெட் என முன்பதிவு கட்டணமாக ரூ.1,000 மட்டுமே நிர்ணயித்துள்ளனர். இந்த அறிவிப்பு புதுமண தம்பதிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.