திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு.,, ‘இதற்கு’ வரும் 5ம் தேதி வரை தடை!!

0
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு.,, 'இதற்கு' வரும் 5ம் தேதி வரை தடை!!
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு.,, 'இதற்கு' வரும் 5ம் தேதி வரை தடை!!

திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான, கருட சேவை நாளை இரவு நடைபெற இருப்பதால் முக்கிய உத்தரவு ஒன்றை தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது.

முக்கிய உத்தரவு:

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும், இருப்பினும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா வாகன சேவை, நான்கு மாட வீதிகளில் நடக்க வில்லை. மேலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல், கோவிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 4 மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது. வரும் 5ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள பிரம்மோற்சவ விழாவில், முக்கிய வாகன சேவையான கருடசேவை (அக்டோபர் 1ம் தேதி) நாளை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், கருட சேவையை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் அக்டோபர் 5 வரை இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here