வீடு தேடி வரும் திருப்பதி லட்டு பிரசாதம்?? நம்பாதீங்க மக்களே!!

0

திருப்பதி கோவிலின் மிகவும் பிரபலமான லட்டு பிரசாதம் வீடு தேடி வந்து தரப்பட்டும் என்று ஒரு போலியான இணையதளம் செயல்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதே போல் அந்த இணையதளத்தில் மக்கள் பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

திருப்பதி லட்டு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். அப்படி ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மிகவும் பிரபலமான ஒரு பிரசாதம், லட்டு. இந்த லட்டு கோவில் தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகிறது. இப்படியான நிலையில் திருப்பதி கோவிலின் புகழ் பெற்ற லட்டு பிரசாதம் வீட்டிற்கே வந்த தரப்படும் என்று ஒரு இணையதளத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த விளம்பரம் balajiprasadam.com என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் வெளிவந்தது. ஒரு லட்டு 500 ரூபாய் என்றும், 5000 ரூபாய் செலுத்தினால் ஆண்டுதோறும் லட்டுகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதே போல் 9600 ரூபாய் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 2 லட்டுகள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

பீலா ராஜேஷுக்கு நீதிபதிகள் கண்டனம்!!

இது திருப்பதி தேவஸ்தானம் நடத்துவது கிடையாது என்றும், தேவஸ்தானம் சார்பில் வீட்டில் லட்டுகளை விநியோகிக்கும் வசதியெல்லாம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அந்த இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மக்கள் இது போன்ற போலி இணையதளங்களை நம்பி பணத்தினை கட்டி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here