போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

0
Tirupathi Temple
Tirupathi Temple

திருப்பதி லட்டு வீட்டிற்கே வரும் என்ற தனியார் இணையதளம் போலியானது என திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் தெரிவித்தது. மேலும் மக்கள் யாரும் அதை நம்பி தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்பதற்காக தேவஸ்தானம் சார்பாக அந்த இணையதளம் முடக்கப்பட்டது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போலி இணையதளம்:

ஆந்திராவில் உள்ள பிரசதிப்பெற்ற வழிபாட்டு தளமான திருமலை ஏழுமலையான் கோவில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்வர். தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி அன்று வைகுண்ட ஏகதேசி, சொர்க்க வாசல் திறப்பு நடைபெறவுள்ளது அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் தரிசனத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் திருப்பதி பிரசாதம் வீட்டிற்கே வரும் என்று அரிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு லட்டு ரூ.500 என்றும், ஒருவர் ரூ.5,000 செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்டுக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ரூ.9600 செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா இரண்டு லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த இணையதளம் திருப்பதி தேவஸ்தானம் உடையது அல்ல எனவும் அது போலியானது எனவும், மக்கள் அதை நம்பி தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2021 நடைபெறுமா??

அது குறித்து ஆய்வுகள் நடத்திய பொது அந்த இணையதளம் போலியானது எனவும் அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்புகொண்ட போது அது அங்கு பணிபுரியும் சைதன்ய என்ற பெண்ணும் அவரை இந்த வேலைக்காக 15- ஆயிரம் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளதாக தங்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து https://balajiprasadam.com/ என்ற இணையதளத்தை தற்காலிகமாக முடக்கியுள்ளதாகவும் அது திருப்பதி தேவஸ்தானத்திற்க்குரியது இல்லை எனவும் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here