எதிர் நீச்சல் சீரியல் இனி இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., காரணம் இது தான்.., லீக்கான முக்கிய அப்டேட்!!!

0
எதிர் நீச்சல் சீரியல் இனி இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., காரணம் இது தான்.., லீக்கான முக்கிய அப்டேட்!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்போது நாளுக்கு நாள் பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் வீட்டு பெண்கள் மட்டும் குணசேகரனை எதிர்த்த நிலையில் இப்போது கதிர், ஞானம் எல்லோரும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர். மேலும் கதிர் சாறு பாலாவிடம் குணசேகரன் சொல்லி தான் நான் அருணை கொலை செய்ய முயற்சி செய்தேன் என அனைத்து உண்மைகளையும் ஒத்துக் கொள்கிறார். இப்படி சீரியல் நாளுக்கு நாள் பட்டையை கிளப்பி வரும் நிலையில் டிஆர்பியிலும் முதலிடங்களை பிடித்து வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியல் ஒளிபரப்பும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியல் இப்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இனி வரும் நாட்களில் இந்த 9 மணிக்கு புத்தம் புதிய தொடரான மல்லி ஒளிபரப்பாக உள்ளது. இதில் பாக்கியராஜ், நளினி, மதன் பாபு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும், அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் இனியா தொடர் 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here