தனது அறிமுக ஆட்டத்தில் அசத்தும் இந்திய வீரர்…, முதல் தொடரிலேயே சீனியர்களை பின்னுக்கு தள்ளி அச்சத்தல்!!

0
தனது அறிமுக ஆட்டத்தில் அசத்தும் இந்திய வீரர்..., முதல் தொடரிலேயே சீனியர்களை பின்னுக்கு தள்ளி அச்சத்தல்!!

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூலம், இந்திய அணியில் திலக் வர்மா தனது அறிமுக ஆட்டத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை இந்த தொடரில் 3 போட்டிகள் விளையாடி உள்ள இவர், 39, 51 மற்றும் 49* ரன்கள் என மொத்தமாக 139 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க., மனம் திறந்து பேசிய ஈரமான ரோஜாவே2 பிரபலம்!!

இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் 128, ரோவ்மேன் பவல் 109, சூர்யகுமார் யாதவ் 105 ரன்களுடன் டாப் 4 இடத்தை பிடித்துள்ளனர். இதில், இந்தியாவின் திலக் வர்மா தனது அறிமுக தொடரிலேயே முதலிடம் பிடித்திருப்பது, இந்திய அணியில் இவரது எதிர்கால இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அறிகுறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here