4.5 டூ 2.0 ரேட்டிங் – டிக்டாக்கை துவம்சம் செய்த இந்தியர்கள்..!

0

இந்தியாவில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என சில நாட்களாக ட்விட்டரில் #BanTikTokInIndia எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் கூகிள் பிளேஸ்டோரில் 4.5 ஆக இருந்த இதன் ரேட்டிங் 2.0 ஆக சரிந்து உள்ளது.

டிக்டாக் மோகம்:

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சினிமா துறையில் நுழைந்தவர்களும் உண்டு. ஆனால் இதில் பலர் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். மேலும் இதனால் குற்ற சம்பவங்களும் நடப்பதால் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. டிக்டாக் மூலம் முறையற்ற பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை சீரழிந்து உள்ளது. சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் பலர் உயிரையும் இழந்து உள்ளனர்.

இந்த செயலியை இந்தியாவில் தடை செய்யக்கோரி தற்போது கோரிக்கை வலுத்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், ஆபாசங்கள் அதிகளவில் டிக்டாக் வீடியோ பதிவிடப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது. இதனால் #tiktokexposed #BanTikTok போன்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. டிக்டாக் மற்றும் யூடூப் ஸ்டார்களுக்கு இடையே ஏற்பட்ட வார்தைப்போர் தற்போது ரசிகர்கள் சண்டையாக உருவெடுத்து உள்ளது.

இந்த சண்டையின் காரணமாகவும் ஒரு தரப்பு ரசிகர்கள் டிக்டாக் மீது தங்களின் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 4.5 ஆக இருந்த டிக்டாக் செயலியின் ரேட்டிங் 2.0 ஆக குறைந்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here