Tik Tok அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்படுகின்றன – தப்பிப்பது எப்படி??

0
Tik Tok

உலகில் 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் டிக் டோக். இதற்கு இந்தியாவில் அதிகபட்ச பயனர்கள் உள்ளனர். இதன் பயன்பாடு நாட்டில் ஆபாசத்தை ஊக்குவிப்பதாக கூறிய மாநில நீதிமன்றம் கடந்த ஆண்டு இதனை தடை செய்தது. இருப்பினும் சில நாட்களில் அந்த தடை நீக்கப்பட்டது. தற்போது இந்த Tik Tok அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளது.

செக் பாய்ண்ட் ரிசெர்ச் ஆய்வு

இந்த பாதுகாப்பு குறைபாடு மூலம் ஒரு ஹேக்கர் மற்றொருவர் அக்கவுண்டின் மூலமாக டிக்டோக்கில் வீடியோக்களை பதிவேற்றவும், நீக்கவும் அனுமதிக்கிறது, மேலும் கணக்கு வைத்திருப்பவரின் மின்னஞ்சல் முகவரியை அணுகவும் அது மட்டுமில்லாமல் அவர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை திருடவும் வாய்ப்புள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடு ஆனது 2019ம ஆண்டு நவம்பரில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் டிசம்பர் 15, 2019 க்குள் சரிசெய்யப்பட்டது.

தப்பிப்பது எப்படி??

இதில் இருந்து தப்பிக்க பயனர் ஒரு முறை லாக் அவுட் செய்து அவர்களின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும். மேலும் அவர்கள் செயலியின் தற்போதைய அப்டேட் வெர்சனை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here