
நீலகிரி மாவட்டம் சீகூர் வனப்பகுதிகளில் நான்கு புலி குட்டிகளுடன் தாய்ப்புலி நடமாடுவதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) முதல் நீர் சத்து குறைவு காரணமாக 3 புலிக் குட்டிகளும் அடுத்தடுத்து உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகாமையில் உயிருடன் இருந்த மற்றொரு புலி குட்டியை மீட்டு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அந்த புலிக்குட்டியும் உயிரிழந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து தாய்ப்புலிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ? என தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வனப்பகுதியில் கடந்த 40 நாட்களில் 6 புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளதால் இயற்கை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பான் கார்டுக்காக இனி வெயிட் பண்ண தேவையில்லை…, இது இருந்தால் 5 நிமிடம் போதும்!!