இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துருச்சா? – அப்போ பிட்ஸா டேஸ்டில் சூப்பர் ரெசிபி இதோ!!

0

பொதுவாகவே நம் அனைவர் வீட்டிலும் இட்லி தோசை போன்ற டிபன் உணவுகளை சாப்பிட்டு நாம் அலுத்து போயிருப்போம். அதற்கு மாற்றாக ஹெல்த்தியான அதே சமயம் சுவையான டிபன் டிஷ் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2

கோதுமை மாவு – 1/4 கப்

கடலை மாவு – 1/4 கப்

பச்சை பீன்ஸ் – 10

கேரட் துருவல் – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 1

கடுகு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – தே.அளவு

கொத்தமல்லி – தே.அளவு

உப்பு – தே.அளவு

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கி உப்பு போட்டு தண்ணீர் தெளித்து மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

பின்னர் தோல் எடுத்து துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதில் கோதுமை மாவு, கடலை மாவு, கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நாம் வேகவைத்து எடுத்து கொண்ட கேரட் பீன்ஸ் கலவையை இதில் போட்டு கிளறி கொள்வோம். கிளறும் போது 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் தனியாக ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இந்த கலவையை நன்றாக பரப்பி கொள்ள மூடி போட்டு மூடி வெந்ததும் பிட்ஸா போல் கட் செய்து திருப்பி போட்டு வேகவிடவும். இப்பொழுது சுவையான சூடான பீட்ஸா டேஸ்டில் டிபன் ரெடி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here