துணிவு VS வாரிசு.., தியேட்டர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!!

0
துணிவு VS வாரிசு.., தியேட்டர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!!
துணிவு VS வாரிசு.., தியேட்டர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!!

கோலிவுட்டில் சிறந்த நடிகர்களான அஜித், விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதில் யாரேனும் ஒருவர் படம் ரிலீஸானாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். ஆனால் இப்போது விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் உருவாகிய வாரிசு திரைப்படமும், வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த செய்தி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாகவே இருந்தது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு இவர்களது படம் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் யார் படம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரு படங்களில் எந்த படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.

நயன்தாராவுக்கு குடைச்சல் குடுத்த முன்னாள் காதலனின் மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

ஆனால் நாம் அனைவரது கேள்விக்கும் இப்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது தமிழகத்தில் துணிவு படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட்ஸ் மூவி பெற்றுள்ளது. அதன்படி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ரெட் ஜெயிண்ட்ஸ் மூவி நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் தான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களிடையே எழுந்து வந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here