மின்சார கட்டணம் செலுத்துவதற்காக மூன்று சலுகைகள் – தமிழக அரசு

0

கொரோனா பேரிடர் காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக மூன்று சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என சேய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மின் கட்டணம்:

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஓர் உயிர்கொல்லியாக உருவெடுத்து பல்வேறு தரப்பு மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த கொரோனா சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் மின் கட்டணம் செலுத்துவது சற்று சிக்கலான ஒன்று.

இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி கொள்ளலாம் அல்லது மே மாதத்திற்கு முந்தைய மாதமான ஏப்ரல் மாத மின் கட்டணத்தை செலுத்தலாம் அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம் என சலுகைகள் வழங்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here