அட கொடுமையே.. கொரோனாவால் பலியான இளம் தமிழ் நடிகர்… ரசிகர்கள் அதிர்ச்சி!!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொரட்டி பட ஹீரோவும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு உயிரிழந்து உள்ளார். இது ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடிப்பழக்கத்தால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு ஏழை இளைஞன் ஒருவனும் அவனுடைய வாழ்க்கையும் எப்படி சீரழிந்து போனது என்பதை தொரட்டி படம் ஆழமாகவும், அழுத்தமாகவும் தமிழ் ரசிகர்களுக்கு புரிய வைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது.

 

இந்த படத்தின் நாயகன் ஷமன் மித்ரு அப்படியே கிராமத்து இளைஞன் போலவே மாறியிருந்தார். அதிகம் பேசாமல் நடிப்பாலும் பார்வையாலும் பாவத்தாலும் பாராட்டுகளை பெற்றவர் நடிகன் ஷமன் மித்ரு. இவருக்கு தற்போது வயது 42. இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு தற்போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஷமன் மித்ருவின் மறைவு செய்தி குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here