அட்ரா சக்க.., அந்த பார்வைக்கு எதோ அர்த்தம் இருக்கு போல.., இணையத்தை தெறிக்க விட்ட “துணிவு” செகண்ட் லுக்!!

0
அட்ரா சக்க.., அந்த பார்வைக்கு எதோ அர்த்தம் இருக்கு போல.., இணையத்தை தெறிக்க விட்ட
அட்ரா சக்க.., அந்த பார்வைக்கு எதோ அர்த்தம் இருக்கு போல.., இணையத்தை தெறிக்க விட்ட "துணிவு" செகண்ட் லுக்!!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செகண்ட் லுக் போஸ்டர்:

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நேற்று மாலை படத்தின் தலைப்பு துணிவு என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை பட தயாரிப்பாளர் வெளியிட்டார். அது மட்டுமின்றி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் #AK61FirstLook, #AjithKumar ஆகிய ஹேஸ்டேக்குகளில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த காமெடி நடிகரா?? அப்போ கண்டிப்பா சிறப்பான சம்பவம் இருக்கு!!

அப்போஸ்டரை பார்த்து அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அவர்களின் சந்தோஷத்தை மேலும் அதிக படுத்தும் விதமாக தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் கண்ணாடி அணிந்து மாஸ் லுக்கில் கிளாசிக்காக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் போஸ்டர் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here