ராஜா ராணி சீரியலை விட்டு அதிரடியாக விலகிய பிரபலம்.., முழு காரணம் இதுதான்!!

0

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தை நடிகை அர்ச்சனா பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளன. அதிலும் ராஜா ராணி சீசன் 2 மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஆலியா மானசா அந்த சீரியலை விட்டு விலகியதை அடுத்து ரியா விஸ்வநாத் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் நெகட்டிவ் ரோலில், நடித்து வந்த விஜே அர்ச்சனா திடீரென சீரியலை விட்டு விலகி உள்ளார். மேலும் அவர் ஏன்? சீரியலை விட்டு விலகினார் என்ற கேள்வி சில நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சமயத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விஜே அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள போகிறார். அதனால் தான், சீரியலை விட்டு விலகி விட்டார், என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அர்ச்சனா முக்கிய பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருஷத்துக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதில் இருந்து விலகிவிட்டேன். மேலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்துகொள்கிறேனா? இல்லையா? என்பது பற்றி சில நாட்களில் தெரியவரும், பொறுத்திருந்து பாருங்க” என கூறி இருக்கிறார் இதன் மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வது உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here