தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வருகிற 26 ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்று அருணாச்சலேஸ்வரரின் அக்னி சொரூபத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள்.
சற்றுமுன் இலங்கையில் நிலநடுக்கம்., ரிக்டர் அளவு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி ரிப்போர்ட்!!!
இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி சாதாரண கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை இருந்த நிலையில், தற்போது ரூ.40,000 வரை வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.