
தமிழகத்தின் தொன்மையான நகரம், தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகரில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவிற்கு மாநகரமே களைகட்டும். இப்படி இத்தனை சிறப்புகள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் ஏப்ரல் 8ம் தேதி மட்டும் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மதுரையில் மற்றொரு புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் அன்று அதிகாலை 4 மணியளவில் புறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருவார்கள்.
பின்னர் கல்யாண உற்சவம் முடிவடைந்த பிறகு மீண்டும் நள்ளிரவில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு புறப்படுவார்கள். இதனால் ஏப்ரல் 8ம் தேதி அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். இருந்தாலும் ஆயிரங்கால் மண்டபம், ஆடி வீதிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.