விஜய் பட நடிகருக்கு திடீர் ‘ஹார்ட் அட்டாக்’ – உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட சோகம்!!

0

திருப்பாச்சி படத்தில் நடித்த பிரபல துணை நடிகருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாத நிலையில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

துணை நடிகர் பெஞ்சமின்

சினிமா துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட துணை நடிகர் பிரபலமடைவார்.அந்த வகையில் நடிகர் விஜயுடன் திருப்பாச்சி படத்தில் நண்பராக நடித்தவர் துணை நடிகர் பெஞ்சமின். அந்த திரைப்படத்தில் “கண்ணப்பன்” என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். அந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் துணை நடிகர் வேடத்தில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சேரனின் “ஆட்டோகிராப்” படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர், கமலின் “வசூல் ராஜா M.B.B.S., அருள், வேங்கை,திருப்பதி போன்ற திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு வயது தற்போது 54 ஆகிறது. இந்நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனது மருத்துவத்திற்கு போதிய பணம் இல்லை என்று உதவி கேட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர்,” எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து சேலத்தில் உள்ள மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்தேன்.

அங்கு செலவழிப்பதற்க்கு போதிய பணம் என்னிடம் இல்லை. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நாராயாணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைத்தியத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியவில்லை. ஆதலால் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் சொல்லி முடிந்த அளவு மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” பார்ப்பவர் மனதை உருக்குமாறு உதவி கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here