தனுஷின் திருச்சிற்றம்பலம் வென்றதா? வீழ்ந்ததா? – ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

0

நீண்ட காலமாக தனுஷ் படங்கள் OTT தளங்களிலேயே வெளியானது. கர்ணன் படத்திற்கு பிறகு திரையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் இன்று (18-08-2022) வெளியாகி உள்ளது. ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம்.

திருச்சிற்றம்பலம்:

பொதுவாகவே தனுஷ் படங்கள் என்றாலே ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வெளியான கர்ணன், அசுரன் ஆகிய படங்கள் தற்போது வரை நின்று பேசுகின்றன. கடைசியாக தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியான மாறன் படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் கண்டிப்பாக தனுஷ் கூடிய விரைவில் ஒரு comeback படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். ஏற்கனவே இப்படத்தின் மேகம் கருக்காதா, தாய் கிழவி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் மூன்று நாயகிகள் வேறு இருப்பதால் தனுஷ் யாருடன் ஜோடி சேர்வார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நித்யா மேனன், தனுஷ் இடையை இருக்கும் உறவு ரசிகர்களுக்கு பிடித்து போக மறுபுறம் ராசி கண்ணா தனுஷின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரியா பவானி சங்கர் தனது தனித்துவமான நடிப்பை படத்தில் கொண்டுவந்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அவ்வாறு ரசிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் ரீவியூகளை இங்கே பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here