உடலை வலுவாக்கும் “தினை அரிசி பொங்கல்” ரெசிபி – சித்தர்கள் உண்ட சிறப்பு உணவு!!

0

இன்றைய அவசர உலகத்துல எல்லாமே இன்ஸ்டன்ட் ஆயிருச்சுங்க. அதுலயும் உணவு விஷயத்துல மக்கள் ரொம்பவே கவனக் குறைவா இருக்காங்க. அதோட விளைவு என்னான்னு பாத்தோம்னா உடல் வலுஇழந்து, ஆரோக்கியம் கெட்டுபோறது தான். ஆரோக்கியமான உணவை சாப்பிடுறது தான் நம்ம உடல் நலத்துக்கு நல்லது. ஊட்டச்சத்து நிறைந்த “தினை அரிசி பொங்கல்” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தினை சாப்பிடுவதினால் உடலை வலுவாக்குகிறது, சிறுநீரை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கபம், வாயு போன்ற நோய்களை நீக்குகிறது, பசியை தூண்டும் தன்மை கொண்டது, உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ளும், உடலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்தும், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் பல கனீமச்சத்துக்கள் போன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன.

தேவையான பொருட்கள்:

தினை அரிசி – 1/2 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முந்திரி – 10

எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் இரண்டு முறை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் சேர்க்க வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரை வேக விட வேண்டும். பிறகு இஞ்சி, மிளகு,சீரகம், கறிவேப்பிலை இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘சித்ரா மரணம் தற்கொலை தான், முகத்தில் இருந்தது அவரது நகக்கீறளே’

இப்பொழுது ஒரு சிறிய பேனில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முந்திரி மற்றும் அரைத்த கலவையை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவற்றை போன்களில் சேர்த்து கிளறி விட வேண்டும். பொங்கல் அதிக கெட்டியாக இருந்தால் அதில் 1/2 கப் சூடான தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இப்பொழுது சூடான, சுவையான, ஆரோக்கியமான “தினை அரிசி பொங்கல்” தயார். இதனுடன், தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து பரிமாறினாள் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here