இனி இவங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை.., மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.., அரசு தடாலடி அறிவிப்பு!!!

0
இனி இவங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை.., மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.., அரசு தடாலடி அறிவிப்பு!!!
இனி இவங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை.., மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.., அரசு தடாலடி அறிவிப்பு!!!

குடும்ப அட்டை தாரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் அட்டை

இந்தியாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சலுகைகளை வசதி படைத்தவர்களும் பயன் பெற்று வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அம்மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் 100 சதுர மீட்டருக்கு மேல் மனை, பிளாட், வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர், கிராமத்தில் உள்ளவர்கள் குடும்ப வருமானம் 2 லட்சத்துக்கும், நகரத்தில் 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அவர்கள் தானாகவே முன் வந்து தங்களது ரேஷன் அட்டையை தாசில்தார் மற்றும் DSO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

12 ஆம் வகுப்பு விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.., தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!!

அப்படி அவர்கள் ஒப்படைக்க தவறினால் அவர்களது ரேஷன் கார்டு செல்லாததாக அறிவிக்கப்படும். மேலும் அந்த குடும்பத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கார், டிராக்டர், ஏசி, ஹார்வெஸ்டர், 5 KV அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட ஜெனரேட்டர், 100 சதுர மீட்டர் நிலம் அல்லது வீடு, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம், ஆயுத உரிமம், வருமான வரி செலுத்தும் போன்ற குடும்பங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் UP அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here