கட்டுமான குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி – தேனியில் சோகம்!!

0

தேனி அருகே அரசு கட்டிடத்திற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் பலி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வேளாண் சார்பாக நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 6 சிறுவன் பலியாகியுள்ளான்.

இது குறித்து விசாரணையில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இன்று அதிகாலை ஹரிஷ் என்ற 6வயது சிறுவன் அந்த வழியாக செல்லும்போது தவறி விழுந்து அதில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால், பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். பின் அந்த குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும்!!

இது தொடர்பாக கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாமல் அலட்சியமாக இருந்த காரணத்திற்காக, கட்டுமான ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here