யோவ்.., சுடர் உன் மகள் தான்.., வெற்றிக்கு தெரிய வரும் உண்மை..,தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

0

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது கண்மணி மறைமுகமாக இருந்து கொண்டு எல்லா வில்லத்தனங்களையும் செய்து வந்தார். இப்பொழுது வெற்றிக்கும், கண்மணிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அபி என்ன தான் வெற்றியை வெறுத்து வந்தாலும், இந்த திருமணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம் வெற்றிக்கு கண்மணி குறித்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் அது குறித்த உண்மையான தகவல் தெரியாததால் வெற்றி நிதானமாக காத்து கொண்டிருக்கிறார். மேலும் கண்மணியின் அந்த சீக்ரட் மொபைல் நம்பர் தெரிய வர அதனை ஹேக் செய்ய கொடுக்கிறார். இப்பொழுது அது யாருடைய நம்பர் என்று வெற்றிக்கு தெரிய வருகிறது. கண்மணி தான் இத்தனை நாள் இந்த வேலையெல்லாம் செய்ததா?? என்று கடுப்பாகிறார். மண்டபத்தில் வைத்தே கண்மணியை மிரட்ட அவர் கண்ணீருடன் நிற்கிறார்.

மேலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, கண்மணி செய்த பித்தலாட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருமாம். அதற்கும் மேல் விஜி அந்த மாண்டபத்திற்கு வர சுடர் பற்றிய உண்மையை சொல்லவும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.

சுடர் தான் உங்க பொண்ணு, அபி குழந்தையை கலைக்கல என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சுடர் தான் தன் மகள் என்று வெற்றி தெரிந்து கொண்டால் கண்டுபாக அபியை விட்டு பிரியாமல் அவருடனேயே வாழ்வார். இனி வரும் எபிசோடுகள் காதல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here