தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் சுடர் தன் அப்பா யார் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் சுடர் தான் தன் மகள் என்ற உண்மையை அவரிடம் சொல்ல விடாமல் வெற்றியிடம் அபி சத்தியம் வாங்குகிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ப்ரோமோவில் சுடர் ஒரு லெட்டரில் தன் அப்பாவுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை எழுதி தெரு தெருவாய் எல்லோரிடம் கொடுக்கிறார். இதற்கு வெற்றியையும் தனக்கு உதவியாக இருக்க செல்கிறார். தன் கண்முன்னே சுடர் படும் வேதனையை பார்க்க முடியாமல் மனதுக்குள்ளேயே தவிக்கிறார். இந்த பக்கம் அபி, சுடரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இதை பார்த்த வெற்றி நடுரோட்டில் விழுந்து கதறி அழுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
இந்தியனுக்காக அதை செய்ய தயாரான எந்திரன்.., படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!