தியேட்டரில் ரிலீஸாகும் படங்களை ஓடிடியில் வெளியிட புதிய கட்டுப்பாடு., திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!!

0
தியேட்டரில் ரிலீஸாகும் படங்களை ஓடிடியில் வெளியிட புதிய கட்டுப்பாடு., திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!!
தியேட்டரில் ரிலீஸாகும் படங்களை ஓடிடியில் வெளியிட புதிய கட்டுப்பாடு., திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!!

புதிய திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை:

கொரோனா காலகட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்த நிலையில், மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வதற்காக படக்குழுவினர், தங்களின் புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வந்தனர். தற்போது திரையரங்கம் திறந்து வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம், படம் திரைக்கு வந்த பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்திடம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் தகவல்.,,இனி உணவு பொருட்கள் கிடையாது ,,அதிரடி உத்தரவு!

அதாவது படம் தியேட்டருக்கு வந்த சில நாட்களில் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் படம் திரையரங்கில் வெளியாகி எட்டு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here