இனி விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக கூடாது.., தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்!!

0
இனி விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக கூடாது.., தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்!!
இனி விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக கூடாது.., தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் சேர்ந்து தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

துணிவு vs வாரிசு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். தற்போது அவர்கள் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் உருவாகி, ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் மோதிக் கொண்டது. மேலும் துணிவு திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் ரிலீஸ் ஆனது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சிறப்புக் காட்சியின் போது இருதரப்பு ரசிகர்களும் சண்டையிட்டுக் கொண்டனர். அதுமட்டுமின்றி அஜித் மற்றும் விஜய் பேனர்களை கிழித்து நாசப்படுத்தினர். இதனால் பல பொது சொத்துக்களும் சேதமடைந்தது. சொல்ல போனால் சிறப்பு காட்சியின் போது அஜித் ரசிகர் ஒருவர் இறந்தே போய் விட்டார்.

வாழ்க்கை பாடத்தை நாசுக்கா சொல்லி கொடுத்தாரு.., அஜித் குறித்து மனம் திறந்த அமீர்-பாவானி!!

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையில், அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியிட கூடாது என்றும், அதிகாலை 1 மணி காட்சியும் மற்றும் 4 மணி காட்சி போன்ற சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here