துணிவு பட பாணியில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்.., பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!!

0
துணிவு பட பாணியில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்.., பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!!
துணிவு பட பாணியில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்.., பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தை பார்த்து வங்கியை கொள்ளை அடித்த நபரை பொதுமக்கள் அடித்து போலீசிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தமிழ் சினிமாவில் பின்பலம் ஏதுமின்றி தன்னம்பிக்கையுடன் போராடி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் வினோத் இயக்கத்தில் உருவாகிய துணிவு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான நிலையில், தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது துணிவு பட பாணியில் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று சீரியலில் கலக்கும் முக்கிய பிரபலம்.., 4 வது சீரியலிலும் என்ட்ரி கொடுத்து சாதனை!!!

அதாவது திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நான்கு ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, திண்டுக்கல் பூச்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த கலில் ரஹ்மான் என்பவர் வங்கிக்குள் நுழைந்து மிளகாய் போடி மற்றும் மயக்க ஸ்பிரே வைத்து ஊழியர்களை மயக்கம் அடைய செய்து கை மற்றும் கால்களை கட்டி போட்டுள்ளார். இதனை தொடர்ந்து அதில் இருந்து ஒரு ஊழியர் தப்பி வெளியே சென்று கூச்சலிட்டார். அதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் உள்ளே சென்று அந்த வாலிபனை தனி அறையில் வைத்து தாக்கினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கடுத்து வந்த காவல்துறை அவரை கைது செய்து விசாரணை செய்த போது அந்த நபர், நான் ஏகப்பட்ட கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டேன். மேலும் கொஞ்சம் காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன் என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவரை தொடர்ந்து காவல்துறை விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here